கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஆந்திர தம்பதியிடம் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை

கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஆந்திர தம்பதியிடம் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்பேடு பஸ்நிலையத்தில் ஆந்திர தம்பதியிடம் 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை
Published on

போரூர்:

திருப்பதி திருச்சானூர் சீனிவாச புரத்தை சேர்ந்தவர் ஆஞ்ச நேயலு. சேலை வியாபாரம் செய்கிறர். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தனது மனைவியுடன் நேற்று காலை சென்னை வந்தார்.

திருமணம் முடிந்ததும் திருப்பதி திரும்ப இரவு 9.30 மணியளவில் கணவன்- மனைவி இருவரும் கோயம்பேடு பஸ்நிலையம் வந்தனர். அங்கு 3-வது நடைமேடையில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த சூட்கேசை மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டான். சூட்கேசில் மனைவியின் தங்க வளையல்கள், சங்கிலிகள் மற்றும் பிரேஸ்லெட் போன்ற 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தன.

இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஆஞ்ச நேயலு மனைவியுடன் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் கோயம்பேடு பஸ்நிலைய கண்காணிப்பு கேமிராவில் பதிவான வீடியோவை போட்டு பார்த்தனர். அதில் காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com