கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை பெய்து வருவதால் கோவை, நீலகிரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
மழையில் நனையும் மக்கள்
மழையில் நனையும் மக்கள்
Published on

கோவை:

கோவை மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்கிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com