கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி ரூ.5 ஆயிரம் பறித்த வாலிபர் கைது

கவுண்டம்பாளையம் அருகே கத்தியை காட்டி ரூ.5 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கை
கை
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம்பாளையம் அசோக்நகர் மேல்பகுதியை சேர்ந்தவர் நல்லு என்கிற நல்லேந்திரன் (வயது34). இவர் நேற்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்தார்.

பின்னர் அவரிடம் பணம் தருமாறு கேட்டார். ஆனால் அவர் தர மறுத்தார். தொடர்ந்து நான் யார் தெரியுமா? ஏற்கனவே பல கொலைகள் செய்துள்ளேன். பணம் தருகிறாயா? அல்லது கத்தியால் குத்திவிடுவேன் என்று கூறி அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லு என்கிற நல்லேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் கணுவாய் ஜங்‌ஷன் அருகே நின்றிருந்த நல்லேந்திரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது 2 கொலை, 3 வழிப்பறி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் தற்போது ஜாமீனில் வெளியே வந்து தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com