கோட்டூர்புரம் அருகே குடிபோதையில் போலீஸ்காரர்ரை தாக்கிய வாலிபர் கைது

கோட்டூர்புரம் அருகே குடிபோதையில் போலீஸ்காரர்ரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்புரம் அருகே குடிபோதையில் போலீஸ்காரர்ரை தாக்கிய வாலிபர் கைது
Published on

சென்னை:

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் விஷ்ணு. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் கோட்டூர்புரம் பகுதிக்கு சென்றார். அங்கு மது குடித்துவிட்டு ரோட்டில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றனர். அவர்களிடம் விஷ்ணு தகராறில் ஈடுபட்டார். திடீரென்று அவர் ஒரு போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com