கோட்டூர்புரத்தில் குட்கா வியாபாரி கைது

கோட்டூர்புரத்தில் குட்கா வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள குட்கா போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை கோட்டூர்புரத்தில் குட்கா போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி கோட்டூர்புரம் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பால் விற்பனை நிலையம் அருகே குட்கா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபாகரன் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள குட்கா போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com