கோட்டயம் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலி

கோட்டயம் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் மூழ்கி பலியான முகம்மது ரியாஸ்,  அப்துல் ஜேக்கப்.
ஆற்றில் மூழ்கி பலியான முகம்மது ரியாஸ், அப்துல் ஜேக்கப்.
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் நாடகம் பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஜோசப். இவரது மகன் அப்துல் ஜேக்கப் (17). குவர நல்லூர் பகுதியை சேர்ந்த ஹபிதி மகன் முகம்மது ரியாஸ் (17).

இவர்கள் 2 பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்கள். நேற்று மாலை இவர்கள் தனது நண்பர்கள் அமல் ரவு, எபின் ஆகியோருடன் திருக்குளம் ஆற்றில் குளிக்க சென்றனர்.

அப்போது அப்துல் ஜேக்கப், முகம்மது ரியாஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.

இதனை பார்த்த அமல் ரவு, எபின் ஆகியோர் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு ஈராட்டு பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அப்துல் ஜேக்கப், முகம்மது ரியாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து ஈராட்டு பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com