கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

கொட்டாம்பட்டி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள ஒட்டக்கோவில்பட்டியை சேர்ந்த பொன்னம்பலம் மகன் மூர்த்தி. விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் நத்தம் அருகே உள்ள பரளியை சேர்ந்த சுகன்யா(வயது 27) என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் மனமுடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com