கொட்டாம்பட்டி அருகே முதியவர் தற்கொலை

கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் வெத்தி(70). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்தநிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிணற்றில் தவறி விழுந்ததில் வயிற்றில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்த வெத்தியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com