கோட்டக்குப்பத்தில் கடன் தகராறில் மோதல்: 2 பெண்கள் காயம்

கோட்டக்குப்பத்தில் கடன் தகராறில் ஏற்பட்ட மோதலில் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.
கோட்டக்குப்பத்தில் கடன் தகராறில் மோதல்: 2 பெண்கள் காயம்
Published on

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மணிபாலன். இவரது மனைவி ஷாகிம்சா (வயது36). இவர் வீட்டிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஜானகி (32) என்பவர் கடனுக்கு மளிகை பொருட்கள் வாங்கினார். ரூ.4.500 வரை அவர் கடனுக்கு மளிகை பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பல நாட்களாக அதற்கான பணத்தை ஜானகி தரவில்லை.

ஷாகிம்சா பணத்தை கேட்கும் போதேல்லாம் ஜானகி பல காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார். இதனால் இருவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்றுமாலை இதுதொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் மாறி,மாறி தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக இருவரும் தனித்தனியே கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினரும் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com