கோட்டக்குப்பம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

கோட்டக்குப்பம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

விழுப்புரம்:

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் கோட்டக்குப்பம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோட்டக்குப்பம் அருகே ஆண்பாக்கத்தை சேர்ந்த பரமசிவம் (வயது 40), மரக்காணத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com