கோட்டக்குப்பத்தில் பேரி கார்டில் பஸ் மோதல்- 4 பெண்கள் காயம்

கோட்டக்குப்பத்தில் இன்று காலை பேரி கார்டில் தனியார் பஸ் மோதியதால் கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
கோட்டக்குப்பத்தில் பேரி கார்டில் பஸ் மோதல்- 4 பெண்கள் காயம்
Published on

சேதராப்பட்டு:

புதுவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் கனகசெட்டிகுளத்துக்கு இன்று காலை புறப்பட்டு வந்தது. புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே அந்த பஸ் வந்த போது முன்னாள் சென்ற தமிழகஅரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றது. அப்போது சாலையின் இடது புறத்தில் இருந்த பேரிகார்டில் தனியார் பஸ் மோதியது. 

மோதிய வேகத்தில் பேரிகார்டை பஸ் இழுத்து சென்றது. இந்த அதிர்ச்சியில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதனால் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பொம்மையார்பாளையத்தை சேர்ந்த செல்வகுமாரி (வயது34) உள்பட 4 பெண்களுக்கு சீராய்ப்பு காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் விமலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com