கோத்தகிரி நகருக்குள் புகுந்து கன்று குட்டியை கடித்து குதறிய சிறுத்தை: பொதுமக்கள் பீதி

நகருக்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை கடித்து குதறியதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கோத்தகிரி நகருக்குள் புகுந்து கன்று குட்டியை கடித்து குதறிய சிறுத்தை: பொதுமக்கள் பீதி
Published on

காந்தல்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பஸ் நிலையம் உள்ளது. இதன் அருகே ஆட்டோ ஸ்டேண்டு, மாதா கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மாலை மாடுகள் மிரண்டு ஓடி வந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஒரு சிறுத்தை கன்று குட்டியை கடித்து குதறியபடி இருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் சத்தம் போட்டு சிறுத்தையை விரட்டினார்கள். இதனை தொடர்ந்து கன்று குட்டியை சிறுத்தை அங்கு விட்டு விட்டு தோட்ட பகுதிக்குள் சென்று விட்டது. காயம் அடைந்த கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிகம் நடமாட்டம் உள்ள கோத்தகிரி பஸ் நிலைய பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி ஆலட்டி, தாவனி, காவி கொரை, பள்ளி கொரை, ஓடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒரு குட்டி யானை, 2 பெரிய யானைகள் நடமாட்டம் உள்ளது.

இந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டு உள்ள கேரட், பீட்ருட் ஆகிய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது. ஒடக்காடு பகுதியில் உள்ள இந்திரா நகரில் மாற்று திறனாளிகள் குடியிருப்பு உள்ளது.

யானைகள் நடமாட்டம் காரணமாக மாற்று திறனாளிகள் வெளியே வர பயப்படுகிறார்கள். யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com