கொரடாச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

கொரடாச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கொடியரசி பெருமாளகரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கொடியரசி அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இரவு தங்கியுள்ளார்.

மீண்டும் அவர் மறுநாள் காலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து கொடியரசி கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.. பெருமாளகரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்று திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், இதை தடுக்க போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com