கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து

கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து
Published on

திருவாரூர்:

கொரடாச்சேரியை அடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60). இவரது அண்ணன் துரைராஜ் (65). இவர்களின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்தநிலையில் சரவணன் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.இந்த தீ அருகில் உள்ள துரைராஜ் வீட்டிலும் பரவியது.

இதுபற்றி திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் 2 வீடுகளிலும் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.

இதுபற்றிய புகாரின் பேரில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com