திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக மகா தீப கொப்பரை தயார்

திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திரு விழாவின் போது, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக, கொப்பரையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக மகா தீப கொப்பரை தயார்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 23-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் இந்த தீபத் திருவிழாவில், அடுத்த மாதம் 2-ந் தேதி காலை பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இதற்காக கடந்தாண்டு 250 கிலோ செம்பு தகடுகளால் வேயப்பட்ட கொப்பரை தயார் செய்யப்பட்டு, அதில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்காக, தீபம் ஏற்றும் கொப்பரையை புதுப்பித்து தயார் செய்ய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, கொப்பரையை தயார் செய்யும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக மகா தீப கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மண்ணு நாடார் தலைமையிலான குழுவினர், கொப்பரையை சுத்தப்படுத்தி தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com