கூவத்தூர் அருகே லாரி மீது பைக் மோதல்: மீனவர் பலி

கூவத்தூர் அருகே விபத்தில் மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து
விபத்து
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அங்காளம்மன் மீனவர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(38). நேற்று இரவு கூவத்தூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந் சுதாகர் உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மீனவர்கள் திடீரென்று வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com