

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள கமலாபுரம் புனவாசல் உடையார் தெருவை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் விஜய் (வயது 22) .இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கமலாபுரத்திலிருந்து கூத்தாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேளுக்குடி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, நின்று கொண்டு இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது விஜய் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் இறந்தார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.