கூடங்குளம் அருகே தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் எரிப்பு

கூடங்குளம் அருகே தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் தீ
மோட்டார் சைக்கிள் தீ
Published on

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள கொத்தன்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சித்திரைவேல் (42) என்பவருக்கும் இடையே அந்த ஊரில் உள்ள ஆவுடையம்மன் கோவில் கொடை விழா சம்பந்தமாக மேளம் குழுவினருக்கு ஆர்டர் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

சம்பவத்தன்று சுயம்பு அவரது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி சென்றார். அப்போது அங்கு வந்த சித்திரைவேல் சுயம்புவின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றார். தீயானது மோட்டார் சைக்கிள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுயம்பு தீயை அணைக்க முயன்றார். எனினும் தீயில் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது குறித்து கூடங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பைக்கிற்கு தீ வைத்து சென்ற சித்திரைவேலை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com