மனைவி புகார்: கிரிக்கெட் வீரர் முகமதுசமிக்கு சம்மன்

மனைவியை துன்புறுத்தியது தொடர்பாக கொல்கத்தா சென்ற முகமது சமியை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மனைவி புகார்: கிரிக்கெட் வீரர் முகமதுசமிக்கு சம்மன்
Published on

கொல்கத்தா:

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது‌சமி. இவரது மனைவி ஹசின் ஜகான்.

முகமது‌சமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். ‌சமி அவரது சகோதரர், உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

அதோடு ‌சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் ஹசின் ஜகான் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் அவர் மறுத்து இருந்தார். மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தான் யாருடனும் சேர்ந்த சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ‌சமி தெரிவித்தார்.

இதற்கிடையே மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது‌சமி மீது கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். கொலை முயற்சி, குடும்ப வன்முறை, குற்றசதி, காயப்படுத்துதல், பலாத்காரம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்ற முகமதுசமியை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். #IPL

X

Maalai Malar
www.maalaimalar.com