

கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் சுமித் முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் அதிரடியாக விளையாட முற்பட்ட கம்பீர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பீரை தொடர்ந்து ஜாக்சன்(10), யூசப் பதான்(4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், மணிஷ் பாண்டே 37(32), டி கிரண்ட் ஹோம் 36(19), சூர்ய யாதவ் 30(16) சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.
புனே அணி தரப்பில் உனகண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் 2 ஓவர்கள் மட்டும் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 156 என்ற இலக்குடன் புனே அணி விளையாடி வருகிறது.