கத்திக்குத்து
செய்திகள்
கோடம்பாக்கம் அருகே முதியவருக்கு கத்திக்குத்து
கோடம்பாக்கம் அருகே முதியவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அமானுல்லா (65). இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குலாப் (40) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்தது. சம்பவத்தன்று இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது குலாப் திடீரென கத்தியால் அமாதுல்லாவை குத்தி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குலாப்பை கைது செய்தனர்.

