இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் போலீஸ் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்
Published on

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு தேனியை சேர்ந்த சுபகுமார் என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்த காவல் நிலையத்தில் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இன்ஸ்பெக்டர் அனைத்து காவலர்களையும் ஒருமையில் திட்டுவதும், தரக்குறைவாக பேசி வருவதாவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகாதவார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டி உள்ளார். இதனால் முருகேசன் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இன்று காலை பணிக்கு வந்த முருகேசன் போலீஸ் நிலையத்தில் இருந்த நோட்டீஸ் போர்ட்டில் தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி எழுதினார்.

இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக எழுதி வைத்து விட்டு மாடிக்கு சென்றார். மற்ற போலீசார் நோட்டீஸ் போர்ட்டில் வேறு ஏதோ எழுதுகிறார் என்று இருந்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய வாசகங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாடிக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கிருந்த ஒரு அறையில் முருகேசன் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கொடைக்கானல் டி.எஸ்.பி. விசாரணை நடத்த விரைந்துள்ளார்.

போலீஸ் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com