கொடைக்கானல் அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை

கொடைக்கானல் அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடைக்கானல் அருகே பயிர் கருகியதால் விவசாயி தற்கொலை
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான கீழான வயல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 37). விவசாயி. தனது தோட்டத்தில் பூண்டு பயிரிட்டு இருந்தார். ஆனால் மழை இல்லாத காரணத்தால் பூண்டு செடிகள் கருகி வந்தன. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

தனது தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்து முருகேசன் மயங்கிய நிலையில் கிடந்தார். கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com