கொடைக்கானலில் கன மழையினால் இருளில் மூழ்கிய கிராமங்கள்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பெய்து வரும் கன மழையினால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியது.
கொடைக்கானலில் கன மழையினால் இருளில் மூழ்கிய கிராமங்கள்
Published on

பெரும்பாறை:

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு இடைவிடாது கன மழை பெய்ததால் பேரிஜம் ஏரி, கொழுவம்பட்டியில் உள்ள கோணலாறு ஏரியில் நீர் வரத்து அதிகரித்தது.

இந்த தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடி அமராவதி ஆற்றில் கலக்கிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இங்கு பயிரிடப்பட்டுள்ள கேரட் உள்ளிட்ட செடிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இடைவிடாது பெய்த கன மழையினால் மேல்மலை கிராமங்களில் பல இடங்களில் மின் கம்பிகள், மின்சார வயர்கள் அறுந்து விழுந்தது. மேலும் மரங்களும் முறிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருவதாலும் மின்சாரம் இல்லாததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com