கொல்கத்தா அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
மார்கன்
மார்கன்
Published on

மும்பை:

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி நேற்று கடும் போராட்டத்துக்கு பிறகு 18 ரன்னில் தோற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த அணி கேப்டன் மார்கனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கும் மெதுவாக பந்துவீசியதற்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com