கே.கே.நகர் அருகே வீட்டில் குட்கா பதுக்கிய வாலிபர் கைது

கே.கே.நகர் அருகே வீட்டில் குட்கா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குட்கா
குட்கா
Published on

போரூர்:

கே.கே.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு மூட்டையில் குட்கா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 20கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் முகமது ரியாஸ் என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com