கிச்சிப்பாளையத்தில் பூ வியாபாரி தற்கொலை

கிச்சிப்பாளையத்தில் பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிச்சிப்பாளையத்தில் பூ வியாபாரி தற்கொலை
Published on

சேலம்:

சேலம் கிச்சிப்பாளையம் முனியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 54). பூ வியாபாரி. நேற்று இவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இவர் என்ன காரணத்திற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.

இதுகுறித்து கிச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com