கிருமாம்பாக்கம் அருகே விபத்து - முதியவர் பலி

கிருமாம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
கிருமாம்பாக்கம் அருகே விபத்து - முதியவர் பலி
Published on

பாகூர்:

சிதம்பரத்தை அடுத்த சீர்காழியை சேர்ந்தவர் முருகன் (வயது35), என்ஜினீயர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலரும் சென்னையில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்கள். இவர் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வந்து பின்னர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது வழக்கம்.

அதுபோல் நேற்று இரவு முருகன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை செல்லும் வழியில் புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது சுமார் 50 வயதுமதிக்கதக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குபதிவு செய்து இறந்த முதியவர் யார்-எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com