கிருமாம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலி

கிருமாம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலியானார்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பாகூர்:

பாகூர் அருகே தமிழக பகுதியான அழகியநத்தம் பூந்தோட்ட வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). தச்சு தொழிலாளி.

நேற்று இரவு இவர் கிருமாம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

கிருமாம்பாக்கம் அமைச்சர் அலுவலகம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், தூக்கி வீசப்பட்ட சரவணன் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரவணனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com