தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜுவுடன் சந்திப்பு

தங்கம் வென்ற தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் உள்பட பதக்கம் வென்ற வீராங்கனைகள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜுவை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கிரண் ரிஜ்ஜுவை சந்தித்த பதக்கம் பெற்ற வீரர்கள்
கிரண் ரிஜ்ஜுவை சந்தித்த பதக்கம் பெற்ற வீரர்கள்
Published on

புதுடெல்லி:

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில், முதல் நாளில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார். தங்கம் வென்ற அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com