சுட்டுக்கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் மனைவி இந்து சமாஜ் கட்சியின் தலைவரானார்.

சுட்டுக்கொல்லப்பட்ட கம்லேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி இந்து சமாஜ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரண் திவாரி மற்றும் கம்லேஷ் திவாரி
கிரண் திவாரி மற்றும் கம்லேஷ் திவாரி
Published on

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கம்லேஷ் திவாரி (45). இதற்கு முன்பு இவர் இந்து மகாசபையில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். 

இதற்கிடையே, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள  கம்லேஷ் திவாரியின் வீட்டிற்குள் கடந்த 18-ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கம்லேஷ் திவாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கம்லேஷ் திவாரியின் குடும்பத்திற்கும் ஒரு வீடும் ரூ. 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், இந்த கொலை தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து சமாஜ் கட்சியின் தலைவராக கம்லேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com