ஸ்பெயின் நாட்டின் இளவரசியானார் மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள்

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார். #KingFelipeofSpain #PrincessLeonor
ஸ்பெயின் நாட்டின் இளவரசியானார் மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள்
Published on

மாட்ரிட்: 

ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் 12 வயது மகள் லியோனார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஸ்பெயினின் வருங்கால அரசியாவார். 

ஸ்பெயின் நாட்டின் மன்னராக ஆறாம் ஃபிலிப் உள்ளார். இவரது 50-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையடுத்து மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாட்ரிட் நகரில் உள்ள ராயல் பேலஸில் நடந்த இந்நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப் தனது மகள் லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார். அவஎ மகளின் வயது 12. 

இளவரசியாக அறிவிக்கப்படுவது அரச குடும்பத்தில் மிகப்பெரிய கவுரவமாகும். இளவரசியாக அறிவிக்கப்பட்ட 12 வயது சிறுமியான லியோனார் வருங்காலத்தில் ஸ்பெயின் நாட்டையே ஆட்சி செய்யும் ராணியாக செயல்படுவார். இளவரசியாக அறிவிக்கப்பட்ட தனது மகளுக்கு கோல்டன் ஃபிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் ஃபிலிப் வழங்கினார். இந்த கோல்டன் ஃபிளீஸ் விருது ஸ்பெயினின் மிக உயர்ந்த கவுரவமாகும்.

இனி சிறுமி லீயோனார் ஸ்பெயின் சிம்மாசனத்திற்குட்பட்டவர் ஆவார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார். நாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #KingFelipeofSpain #PrincessLeonor #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com