

கோவை:
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள பிச்சனூரை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). கூலித்தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று தனது தந்தையிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவரது தந்தை பணம் கொடுக்க மறுத்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(38) பெயிண்டர். இவரது மனைவி அம்பிகா. இவர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால் அம்பிகா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து முருகன் மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அம்பிகா வர மறுத்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.