கீழ்வேளூர் அருகே காய்கறி கடை உரிமையாளர் தற்கொலை

கீழ்வேளூர் அருகே காய்கறி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வடக்காலத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (வயது48). இவர் இலுப்பூர் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் காய்கறி கடை நடத்தி வந்தார். காய்கறி கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் மனஉளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று வடக்காலத்தூர் நூலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்து மயங்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர். அப்போது பாண்டியன் தான் விஷத்தை குடித்துவிட்டதாக தெரிவித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக திருவாருர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாண்டியன் இறந்தார். இதுகுறித்து பாண்டியனின் மனைவி மேரி கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com