விளையாட்டு விபரீதமானது- தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பலி

விளையாடும் போது தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு விபரீதமானது- தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பலி
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி டி.நல்லிக் கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரவிந்திரன் (வயது 40). தொழிலாளி.

இவரது மகள் ஸ்ரீசாதனா (9) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ரவிந்திரனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஸ்ரீசாதனா தனது தம்பி மற்றும் உறவினர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினார். பாட்டி லோகநாயகி குழந்தைகளை கவனித்துள்ளார்.

குழந்தைகள் வீட்டுக்குள்ளும், வெளியேயும் தொட்டில் கட்டி அதில் கால்களை இரு புறமும் போட்டவாறு அமர்ந்து சுற்றி, சுற்றி விளையாடியதாக தெரிகிறது.

அப்போது வீட்டுக்குள் ஸ்ரீசாதனா விளையாடிக் கொண்டிருந்த தொட்டிலில் எதிர் பாராத விதமாக சேலை துணி அவரது கழுத்தில் இறுக்கியது. இதில் அவள் பரிதாபமாக இறந்தாள்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாட்டி லோகநாயகி சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் ஸ்ரீசாதனாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீசாதனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com