கும்பகோணம் தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல்- பிரபல ரவுடி கைது

கும்பகோணம் திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல்- பிரபல ரவுடி கைது
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அறக்கட்டளை தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகன் லாலி மணிகண்டன் (வயது 30). இவனுடன் திருச்சியை சேர்ந்த பிரசாந்த், தாராசுரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதில் லாலி மணிகண்டன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் லாலி மணிகண்டன் கும்பகோணத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் 3 பேரையும் நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்து விசாரித்தபோது தப்பி ஓடினர். இதில் முதலில் தாராபுரத்தை சேர்ந்த அசோக்குமார் போலீசில் சிக்கினார். மீதமுள்ள இரண்டு பேரையும் விரட்டிச் சென்றபோது லாலி மணிகண்டன், பிரசாந்த் ஆகிய இருவரும் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர். இதில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் மீட்டு போலீசார் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

லாலி மணிகண்டன் கூலிப்படை தலைவனாக இருந்து மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

லாலி மணிகண்டன் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com