சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெலிபோனில் மிரட்டல்: தேனாம்பேட்டை போலீசில் புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெலிபோனில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சசிகலா புஷ்பா எம்.பி.க்கு டெலிபோனில் மிரட்டல்: தேனாம்பேட்டை போலீசில் புகார்
Published on

சென்னை:

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக பின்னர் கூறினார். அதன்பிறகு தேனாம்பேட்டையில் உள்ள விடுதியில் சசிகலா புஷ்பா தங்கி இருந்தார்.

அப்போது அவரது அண்ணாநகர் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரப் பெண் சகிகலா புஷ்பாவுக்கு போன் செய்தார். மர்மநபர் ஒருவர் அண்ணாநகர் வீட்டுக்கு போன் செய்து, சசிகலா புஷ்பாவை ஒழுங்காக இருக்க சொல், தேவையில்லாமல் செயல்பட்டால் முகத்தில் ஆசிட் விசுவோம் என்று மிரட்டுவதாக கூறினார்.

இதையடுத்து சசிகலா புஷ்பா உடனே தேனாம்பேட்டை போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு அண்ணாநகர் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com