வந்தவாசி அருகே மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை- வாலிபர் வெறிச்செயல்

வந்தவாசி அருகே தகராறில் தாக்கப்பட்ட மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வந்தவாசி அருகே மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை- வாலிபர் வெறிச்செயல்
Published on

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி காசியம்மாள் (வயது 70). பலராமன் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தந்தை சாவிற்கு உறவினர்கள் யாரும் சரிவர வரவில்லை என்று அவரது இளைய மகன் ரவி போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது அந்த வழியாக வந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அரிவரசன் ரவியிடம் ஏன் உறவினர்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரிவரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காசியம்மாள் தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அவர் காசியம்மாளையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்து அங்கேய அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அங்கிருந்து அரிவரசன் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய அரிவரசனை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com