கீழ்பென்னாத்தூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ்பென்னாத்தூர் மின்பகிர்மான வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ்பென்னாத்தூர் மின்பகிர்மான வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. கிழக்கு கோட்ட தலைவர் ஜெ.அருள்தாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வாரிய செயலாளர் பதவியை நிரப்பிட வேண்டும், இணை மேலாண்மை இயக்குனர் பதவியை திரும்ப பெற வேண்டும், ஊரடங்கு காலத்தில் மரணம் அடையும் மின்வாரிய தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிழக்கு கோட்ட பிரதிநிதி நாராயணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com