டபிள்யூடிஏ பைனல்ஸ்: நம்பர் ஒன் வீராங்கனைக்கு அதிர்ச்சி கொடுத்தார் மாற்று வீராங்கனை

மாற்று வீராங்கனையாக களம் இறங்கிய கிகி பெர்ட்டென்ஸ் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்தார்.
கிகி பெர்ட்டென்ஸ்
கிகி பெர்ட்டென்ஸ்
Published on

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இடையிலான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள ஷின்சென்னில் நடைபெற்று வருகிறது.

8 வீராங்கனைகளும் ரெட், பர்பிள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ரெட் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி இடம் பிடித்துள்ளார். இதே பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையான ஒசாகா இடம் பிடித்திருந்தார்.

தோள்பட்டை காயம் காரணமாக ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக 10-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்ட்டென்ஸ் சேர்க்கப்பட்டார். கிகி பெர்ட்டென்ஸ் - ஆஷ்லே பார்ட்டி இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதல் செட்டை ஆஷ்லே பார்ட்டி 6-3 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் கிகி பெர்ட்டென்ஸ் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஆஷ்லே பார்ட்டியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் ஆஷ்லே பார்ட்டி 2-வது செட்டை 3-6 எனவும், 3-வது செட்டை 4-6 எனவும் அதிர்ச்சிகரமான வகையில் இழந்து தோல்வியைத் தழுவினார். இரண்டு மணி நேரம் போராடி முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அசத்தினார் கிகி பெர்ட்டென்ஸ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com