தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு வந்த இளம்பெண் கடத்தல்

தொட்டியம் அருகே சித்தாள் வேலைக்கு வந்த இளம்பெண்ணை கடத்தியதாக பி.எட்.படித்த ஏற்கனவே திருமணமான கொத்தனார் மீது பெண்ணின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
கடத்தல்
கடத்தல்
Published on

தொட்டியம்:

திருச்சிமாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் குடித்தெருவை சேர்ந்தவர் சேவுகன். இவரது மகன் ரவிக்குமார்(32) பி.எட் பட்டதாரி இவருக்கும் கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த ராஜாமணி (30) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் ரவிக்குமாருக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அப்பகுதியில் கட்டிடங்கள் கட்டும் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் அப்பணநல்லூரை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 28-ந்தேதி வேலைக்கு சென்ற தனது மகளை காணவில்லை எனவும் அவரை ரவிக்குமார் கடத்தி சென்று விட்டதாக சித்தாள் வேலைக்கு வந்த இளம்பெண்ணின் தந்தை மணி தொட்டியம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும்போலீசார் வழக்குபதிவு செய்து ரவிக்குமார் மற்றும் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com