திருமங்கலம் அருகே இளம் பெண்ணை கடத்தி திருமணம்

இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருமணம்
திருமணம்
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முத்தையன்பட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவரது மனைவி அன்ன பெருமாயி. இவர்களது மகள் சுருதி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுருதி திடீரென மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். பலனில்லை.

இந்த நிலையில் சிந்துப்பட்டி போலீசில் அன்னபெருமாயி புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மகளை மதுரை தத்தனேரி காமாட்சி நகரைச் சேர்ந்த மனோகரன் மகன் முத்தையா (20) என்பவர் கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் மதுரையில் இருந்த சுருதியை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com