மாணவி கடத்தலில் கைதான ஊர்காவல் படை வீரர் ஓசூர் சிறையில் அடைப்பு

தேன்கனிக்கோட்டை அருகே மாணவியை கடத்தி சென்ற ஊர்காவல் படை வீரரை போலீசார் கைது செய்து ஓசூர் சிறையில் அடைத்தனர்.
மாணவி கடத்தலில் கைதான ஊர்காவல் படை வீரர் ஓசூர் சிறையில் அடைப்பு
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ராயக்கோட்டை ரகமத் காலனியை சேர்ந்தவரின் 16 வயது மகள் ராயக்கோட்டை அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6-ந்தேதி கடைக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்ப வில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதில் ராயக்கோட்டை ஜெ.ஜெ,நகரை சேர்ந்த முருகனின் மகனும், ஊர்க்காவல் படைவீரருமான சங்கர் (26) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சாந்தா மாணவியை மீட்டு பேற்றோரிடம் ஒப்படைத்தார். அவரை கடத்தி சென்ற சங்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர் செய்து ஓசூர் கிளை சிறையில் அடைத்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com