தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்

தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள டி.கொத்தபள்ளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது பிளஸ்-2 மாணவி. நேற்று வெளியில் சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை பெற்றோர்கள் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் பிரவின்குமார் என்பவர் எனது மகளை கடத்தி சென்றுள்ளார். 

மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த டேவிட்ராஜ், செல்வராஜ், புருசோத்தமன், சதீஸ், பாலாஜி, பாபு, அணில்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com