கோட்டக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவி கடத்தல்- சென்னை வாலிபர் மீது புகார்

கோட்டக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற சென்னை வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோட்டக்குப்பத்தில் பிளஸ்-2 மாணவி கடத்தல்- சென்னை வாலிபர் மீது புகார்
Published on

சேதராப்பட்டு:

சென்னை பாடிஅம்பத்தூரை சேர்ந்தவர் இளையராஜா (வயது24). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படித்து வந்த ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்தார். தொடர்ந்து அந்த மாணவிக்கு இளையராஜா காதல் தொல்லை கொடுத்து வந்ததால் அந்த மாணவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் மாணவி உறவினர் வீட்டில் தங்கி இருப்பதை அறிந்த இளையராஜா நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கோட்டக்குப்பத்திற்கு வந்தார். அங்கு உறவினர் வீட்டில் இருந்த மாணவியை இளையராஜா வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து மாணவியின் தந்தை கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்தி சென்ற இளையராஜாவை தேடி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com