பிளஸ்-2 மாணவி கடத்தல்- போக்சோ சட்டத்தில் கைதான உதவி பேராசிரியர் சிறையில் அடைப்பு

தர்மபுரி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய உதவி பேராசிரியர் தர்மபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிளஸ்-2 மாணவி கடத்தல்- போக்சோ சட்டத்தில் கைதான உதவி பேராசிரியர் சிறையில் அடைப்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

இவர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தர்மபுரி  அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர். 

இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். கைதான கோபால கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com