கலிதீர்த்தாள்குப்பத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

கலிதீர்த்தாள் குப்பத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

திருபுவனை:

திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பத்தில் அரசு கலைஞர் கருணாநிதி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு வந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் மகளை தேடினர். ஆனால் எங்கும் இல்லை.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். புகாரில் தங்களது மகளை கீழூரை சேர்ந்த புருஷோத்தமன் மகன் கவுதம் (21) என்பவர் கடத்தி சென்று விட்டதாக புகார் செய்திருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாணவியை கவுதம் கடத்தி சென்று விழுப்புரம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விழுப்புரம் பகுதிக்கு சென்று கவுதமனை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com