வடமதுரையில் மைனர் பெண்ணை கடத்திய மில் வேன் டிரைவர்

வடமதுரையில் மைனர் பெண்ணை கடத்திய மில் வேன் டிரைவர் குறித்து பெண்ணின் தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
வடமதுரையில் மைனர் பெண்ணை கடத்திய மில் வேன் டிரைவர்
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி மாமரத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதே மில்லில் அய்யலூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பவர் வேன் டிரைவராக உள்ளார்.

வேனில் தொழிலாளர்களை அழைத்து வரும் போது அந்த பெண்ணுக்கு கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.

சம்பவத்தன்று வேலைக்கு வந்த பெண்ணை கார்த்திக் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெண்ணின் தாய் பெருமாயி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் கார்த்திக்கை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com