வத்தலக்குண்டு அருகே மைனர் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் கைது

வத்தலக்குண்டு அருகே மைனர் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னமநாயக்கன் கோட்டையைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண் நிலக்கோட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் நிலக்கோட்டை சொக்குபிள்ளைபட்டியைச் சேர்ந்த ஜோதிராஜன் மகன் வரதராஜன் (வயது 24) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 28-ந் தேதி வேலைக்கு சென்ற பெண் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியனிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்த போது வரதராஜன்கடத்திச் சென்றது தெரிய வந்தது.

இவ்வழக்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேன்மொழி தலைமறைவாக இருந்த வரதராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com