தேனி அருகே மைனர் பெண்ணை கடத்திய 3 பேர் மீது வழக்கு

தேனி அருகே மைனர் பெண்ணை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி அருகே மைனர் பெண்ணை கடத்திய 3 பேர் மீது வழக்கு
Published on

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி நூலகத் தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கோகிலாதேவி (வயது 16). பிளஸ்-1 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த கோகிலா தேவியை அதே பகுதியைச் சேர்ந்த கொடித்துரை மகன் பார்த்திபன் (30) என்பவர் கடத்திச் சென்று விட்டார்.

இது குறித்து லெட்சுமணன் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கோகிலாதேவியை கடத்திச் சென்ற கொடித்துரை, அவரது மகன் பார்த்திபன், மனைவி செல்வி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com